கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் 123வது பிறந்த நாளை முன்னிட்டு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் வேப்பமூடு ஜங்ஷனில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பெரும் தலைவர் காமராஜரின் 123- வது பிறந்த நாள் விழா கொண்டாடிய குமரி அதிமுக. நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் உள்ள பெரும் தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த தளவாய் சுந்தரம்.

இந்த நிகழ்வுக்கு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ தலைமையிலும், முன்னாள் அமைச்சர் கே.டி. பச்சைமால் முன்னிலையிலும் இனிப்பு வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இதில் கழக நிர்வாகிகள் அக்ஷயா கண்ணன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.