• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பட்டீஸ்வரர் கோவிலில் கல்யாணி யானைக்கு, நான்கு முறை குளியல் !!!

BySeenu

Mar 27, 2025

கோவை மாவட்ட வளர்ப்பு யானை நலக் குழு, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் உள்ள கல்யாணி யானையின் உடல் நலத்தை இன்று ஆய்வு செய்தது.

கோவை மாவட்ட வன அலுவலர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், பேரூர் அரசு கால்நடை மருத்துவர், பேரூர் கோவில் செயல் அலுவலர் மற்றும் உலகளாவிய இயற்கைக்கான நிதியம் (WWF) பிரதிநிதி பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆய்வின் போது, கோடை காலத்தில் யானையின் உடல் நலத்தை பராமரிப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

குறிப்பாக, யானைக்கு ஒரு நாளைக்கு நான்கு முறை குளிப்பாட்டவும், அதிக நீர்ச்சத்து உள்ள பழங்களை உணவாக வழங்கவும் கோவில் செயல் அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், யானையின் உடல் நலத்தை தொடர்ந்து கண்காணித்து, தேவையான மருத்துவ உதவிகளை வழங்கவும் வன அலுவலர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வு, யானையின் உடல்நலத்தை உறுதி செய்வதற்கும், கோடை காலத்தில் யானை பாதுகாப்பாக இருப்பதற்கும் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.