• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சங்குபேட்டை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பூச்சொரிதலுக்கான “கால்கொள் ” நிகழ்ச்சி

ByT.Vasanthkumar

May 19, 2024

பெரம்பலூர் சங்குபேட்டையிலுள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா பூச்சொரிதலையொட்டி விழாபந்தலுக்கான கால்கொள் (முகூர்த்தகால்நடும்) நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வையொட்டி முற்பகல் 11 மணிக்கு மூலவருக்கு அபிஷேகமும், பிற்பகல் 1.00 மணிக்கு உச்சிகால பூஜையும் நடைபெற்றது. இந்நிகழ்வில் சங்குபேட்டை பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துமாரிஅம்மனை வழிபட்டு அம்மனருள் பெற்றுச் சென்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் நகர் 19 மற்றும் 20-வது வார்டு பொதுமக்கள், கிராம காரியஸ்தர்கள், பூசாரிகள், அடங்கிய விழா குழுவினர் செய்து வருகின்றனர்.