கன்னியாகுமரி அருள் மிகு பகவதியம்மன் கோவிலில் ஆண்டுதோறும்.ஆடி மாதம். திருவாடுதுறை ஆதினம் மடம் சார்பில் களப பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
இன்று காலை முதல் மதியம் 12.30.,மணிவரை நடந்த களப பூஜையில் பங்கேற்ற
திருவாடுதுறை ஆதினம் 24_வது ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதானம் பங்கேற்றார். திருவாடுதுறை ஆதினத்தின் இருந்து கொண்டு வரப்பட்ட “தங்க குடத்தில்”புனித நீர் எடுத்து வரப்பட்டு பகவதியம்மனுக்கு அபிசகம் செய்து சந்தனத்தால் ஆன களப பூஜை நடைபெற்றது.


இந்த ஆண்டு களப பூஜைக்கு முன் 24_வது குருமகா சன்னிதானம் காசி, கங்கை புனித யாத்திரையை நிறைவு செய்தபின் கலந்து கொண்ட ஆடி மாதம் களபம் பூஜையில். திருவாடுதுறை ஆதினம் பக்தர்கள், அடியார்கள் திரளாக கலந்து கொண்டனர்.


களப பூஜை முடிந்த பின் தேவி பகவதியம்மன் திருக்கோயில் தலை வாசலில் தங்க குடத்துடன் மகா சன்னிதானம் பக்தர்களுக்கு அருட்பாலித்தார்.









