விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாரணாபுரம் கிராத்தில் ஐந்தாம் ஆண்டு மாபெரும் மின்னொளியில் கபாடி போட்டி நடத்தப்பட்டது. சிவகாசி,திருத்தங்கல், நடுவப்பட்டி, விருதுநகர், கோவில்பட்டி ராஜாபாளையம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 26 அணிகள் கலந்து கொண்டன.

மின்னலே கபடி போட்டியினை அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார். முன்னதாக கபடி போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு கை உலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
