• Fri. Feb 6th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

எடப்பாடியை நேரில் சந்தித்து அதிமுக கூட்டணிக்கு தங்களது ஆதரவு தெரிவித்த கே. டி. ஆர்..,

ByK Kaliraj

Feb 6, 2026

அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள்  அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின்  ஏற்பாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து அதிமுக கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். 

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜியின்  ஏற்பாட்டில்  தமிழ்நாடு நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத்தலைவர் வழக்கறிஞர் V.மகாராஜன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் சந்தித்து வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

அதே போல மருது தேசிய கழகத்தின் நிறுவனத்தலைவர் மருது பாண்டியன் சேர்வை உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தங்களை ஆதரவை தெரிவித்தனர்.

மேலும் அகில இந்திய குயவர் உரிமை கட்சியின் தேசிய தலைவர் சாலைசாதியன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகளும் நேரில் சந்தித்து வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர் ..

மருதம் மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் பொருளாளர் சந்தனப்பிரியா பசுபதி பாண்டியன் கூட்டமைப்பு நிர்வாகிகளும், தமிழக முன்னேற்ற காங்கிரஸ் நிறுவனர் அருள்தாஸ் தலைமையிலான நிர்வாகிகளும் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுகவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

பல்வேறு அமைப்புகள் அதிமுகவுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக முழுவதும் பிரச்சாரம் செய்வதாக தெரிவித்ததால் இதற்கான ஏற்பாடுகளை செய்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டினார்.