விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்றத்தொகுதி திருத்தங்கல் பெரியார் காலனி அருகே உள்ள எம்.ஜி.ஆர் காலனியில் வீற்றிருக்கும் அருள்மிகு: ஸ்ரீபத்ரகாளியம்மன்* திருக்கோவில்… மஹா கும்பாபிஷேக* விழா நடைபெறுகிறது. விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு திருப்பணி குழு கமிட்டினர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜியிடம் அழைப்பிதழ் வழங்கினார்கள்.

அழைப்பிதழை பெற்றுக் கொண்ட முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி அவசியம் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதாக உறுதியளித்தார்.

தொடர்ந்து கும்பாபிஷேக பணிகள் சிறப்பாக நடைபெறுவதற்கு ரூபாய் 50,000 நன்கொடை வழங்கினார்.
நன்கொடை வழங்கியதற்கு திருப்பணி குழு கமிட்டியினர் அமைச்சர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும் இந்நிகழ்வின்போது கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.




