• Fri. Jan 30th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

ஜாய் பல்கலைக்கழகம் மாணவர் பலவிதமான திறன் மையம் திறப்பு..,

ஜாய் பல்கலைக்கழகம் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள. மாணவர்களின் பலவிதமான திறன் விளையாட்டு மையத்தை இந்தியா விண்வெளி துறையின் தலைவர் முனைவர். நாராயண் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்வில் ஜாய் பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் ஜாய் ராஜா முன்னிலை வகித்தார்.

நிகழ்வில் மாணவ, மாணவிகள் கூட்டத்தில் பேசிய இந்திய விண்வெளி துறையின் தலைவர் முனைவர் நாராயணன்.

நான் நாகர் கோவிலுக்கு சற்று தொலைவில் உள்ள மேலக்காட்டு விளை என் சொந்த ஊர். ஊரை அடுத்துள்ள கீழக்காட்டுவிளை அரசு ஆரம்ப பள்ளியில் பயின்றேன். 3_ம் வகுப்பு முதல் 11_வகுப்பு வரையிலும் முதல் மதிப்பெண் பெறும் மாணவனாக இருந்தேன். என் தந்தையின் நண்பரின் வழிகாட்டுதலில். நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து டிப்ளமோவில் முதல் வகுப்பில் வெற்றி பெற்றதையும்.

தனியார் நிறுவனமான எம் எம் ஆர் டயர் நிறுவனத்திலும், திருச்சி BHEL நிறுவனங்களில் இணைமேலாளராக பணியாற்றியதையும் இளைஞர்கள் இலங்கை நோக்கிய பயணத்தில் உறுதியாக இருந்து,இலக்கை கல்வி மூலம் அடைய வேண்டும்.

இந்தியா விண்வெளி முயற்சியில் புதிய சிகரங்களை தொடும் என தெரிவித்தார்
இந்திய விண்வெளி துறையின் தலைவர் வி.நாராயணன் விழாவின் நிறைவில் சிறப்பு விருந்தினர்களுக்கு ஜாய் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் ஜாய் ராஜா
சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.