• Fri. Apr 26th, 2024

காங்.கட்சி அலுவலகத்துக்குள் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு…

Byகாயத்ரி

Jul 21, 2022

காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் பத்திரிகையாளர்கள் நுழைய டெல்லி போலீஸ் அனுமதி மறுப்பதாக புகார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரையும் விசாரணை செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்தது. இதனை அடுத்து சமீபத்தில் ராகுல்காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகிய நிலையில் அவரிடம் விசாரணை முடிந்தது. இந்நிலையில் உடல்நிலை பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சோனியா காந்தி தற்போது முழுமையாக குணமடைந்து உள்ளதால் அவரிடம் விசாரணை செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. இதனையடுத்து இன்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆஜராக உள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆஜராக உள்ளதை அடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் பத்திரிகையாளர்கள் நுழைய டெல்லி போலீஸ் அனுமதி மறுப்பதாக காங்கிரஸ் எம்.பி.ஜெய்ராம் ரமேஷ் புகார் அளித்தார். அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு சோனியா காந்தி ஆஜராகும் நிலையில் ஊடகங்களுக்கு தடை விதித்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *