தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு படிப்பை முடித்தவுடன் அரசு பணியில் சேர்வதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் இளநிலை வரை பொறியாளர், நில அளவையர், இளநிலை பொறியாளர், ஓவர்சியர், Draftsman, தொழில்நுட்ப உதவியாளர் உட்பட ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.

அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் சாலை ஆய்வாளர்க்கான 957 காலி பணியிடங்களுக்கு தேர்வுகள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக மதுரை சுப்ரமணியபுரம் பகுதியில் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் பயின்ற மூன்று மாணவிகள் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் சாலை ஆய்வாளர் பணிக்கு தேர்வாகி டிஎன்பிஎஸ்சி மூலம் பணி நியமன ஆணைகளை பெற்றுள்ளனர். அந்த மூன்று மாணவிகளை கல்லூரி முதல்வர் விஜயகுமாரி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் சக மாணவிகள் பாராட்டினர்.