• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருச்சி, கோவை, மதுரை உள்பட 8 நகரங்களில் 5ஜி சேவை தொடங்குகிறது ஜியோ..!!

ByA.Tamilselvan

Mar 16, 2023

தமிழகத்தில் 8 நகரங்களில் 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் தொடங்க உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஜியோ இந்தியாவில் இணையப் புரட்சியை ஏற்படுத்திவருகிறது. தரமான 4 ஜி இணைய சேவையை வழங்கியதன் மூலம் இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக ஜியோ உருவெடுத்தது. தற்போது, ஜியோ நிறுவனம் அதன் பயனாளர்களுக்கு 5 ஜி சேவையை வழங்கிவருகிறது. இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஜியோ 5 சேவை வழங்கும் எல்லையை அதிகப்படுத்திவருகிறது. ரிலையன்ஸ் ஜியோ தனது ட்ரூ 5ஜி சேவைகளை நாடு முழுவதும் 34 புதிய நகரங்களில் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மேகாலயா, ஆர்டிஷ், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய நகரங்கள் உள்ளன. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களில் 5ஜி சேவையை விரிவுபடுத்த உள்ளது. இந்தியா முழுவதும் மேலும் 34 நகரங்களில், 5G சேவையை தொடங்க உள்ளதால் அதன் எண்ணிக்கை 365ஆக அதிகரிக்கிறது. தமிழ்நாட்டில் தற்போது 30 முக்கிய நகரங்களில் ஜியோ 5ஜி சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது!