தேசிய அளவிலான யோகா போட்டியில் வென்று துபாய் நாட்டில் நடைபெற உள்ள சர்வதேச யோகா போட்டிக்கு இராஜபாளையம் சங்கம்பட்டி வேலம்மாள் போதி பள்ளி மாணவி ஜெயவர்தினி தேர்வு பெற்றுள்ளார்.
கொடைக்கானலில் நடைபெற்ற தமிழ்நாடு ஸ்டேட் சாப்டர் மற்றும் இண்டர்நேஷனல் யூத் யோகா ஃபெடரேஷன் இணைந்து நடத்திய தேசிய அளவிலான யோகா போட்டியில்,
இராஜபாளையம் சங்கம்பட்டி வேலம்மாள் போதி பள்ளியில் ஒண்பதாம் வகுப்பு பயின்று வரும்,ஜெ.கே. ஜெயவர்தனி ஒட்டு மொத்த சாம்பியன் வென்று முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
கடந்த 27,28,29 ஆகிய தேதிகளில் கொடைக்கானலில் தமிழ்நாடு ஸ்டேட் சாப்டர் மற்றும் இண்டர்நேஷனல் யூத் யோகா ஃபெடரேஷன் ஆகியோர் இணைந்து தேசிய அளவிலான யோகா போட்டிகள் நடைபெற்றது.
பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த யோகா போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் இராஜபாளையம் சங்கம்பட்டி வேலம்மாள் போதி பள்ளியில் ஒண்பதாம் வகுப்பு பயின்று வரும், ஸ்ரீவில்லிபுத்தூர். கம்மாப்பட்டியைச் சேர்ந்த மாணவி J.K. ஜெயவர்தனி ஒட்டு மொத்த பிரிவிலும் சாம்பியன் ஆப் சாம்பியன் எனும் பட்டம் வென்று முதலிடம் பிடித்தார்.
ஏற்கனவே பல்வேறு மாவட்ட, மாநில,சர்வதேச யோகா போட்டிகளில் வென்று சாதனை படைத்த நிலையில்,துபாய் நாட்டில் நடைபெற உள்ள சர்வதேச யோகா போட்டியில் தேர்வு பெற்றுள்ளார்.
தொடர்ந்து யோகாவில் சாதனைகள் படைத்து வரும் மாணவி ஜெயவர்தினியை அவரது பள்ளி ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.