திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பேருந்து நிலையம் அருகே மயில் ரவுண்டான அருகில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் டிசம்பர் 5 நினைவு தினம் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பழனி நகர செயலாளர் முருகானந்தம் அவர்கள் தலைமையில் ஜெயலலிதா அவர்களின் திருஉருவப்படத்திற்கு முன்னாள் குத்துவிளக்கு ஏற்றி மலர் தூவி நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் வேணுகோபால், குப்புசாமி, எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் ரவி மனோகரன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அன்வர் தின், பொதுக்குழு உறுப்பினர் ராஜா முகமது, தகவல் தொழில்நுட்ப பிரிவு குகன் உள்ளிட்ட ,சார்பு இணை ,மகளிர் அணி என கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.









