• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மனுஷனா இருந்ததுபோதும்… நாயாக மாறிய ஜப்பான் மனிதர்..

Byகாயத்ரி

May 26, 2022

ஜப்பானில் மனிதனாய் வாழ்வதை வெறுத்த நபர் ஒருவர் ஏகமாக செலவு செய்து நாய் உடை அணிந்து நாயாக மாறியுள்ள சம்பவம் வைரலாகியுள்ளது.

ஜப்பான் நாட்டை சேர்ந்த டோகோ என்பவருக்கு நீண்டகாலமாக ஒரு விசித்திர ஆசை இருந்து வந்துள்ளது. விலங்குகள் மீது பிரியம் கொண்ட அவர் தானும் ஒரு விலங்காகவே மாறிவிட வேண்டும் என்ற ஆசைதான் அது. நீண்ட காலமாக ஆசையாக இருந்த விஷயத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளார் டோகோ. இதற்காக ஜெப்பெட் என்ற உடை தயாரிக்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்ட அவர் முழுக்க நிஜமான நாய் போல தோற்றம் தரும் உடை வேண்டும் என கேட்டுள்ளார்.
இதற்காக 12 லட்சம் ரூபாய் செலவு செய்த நிலையில் அந்நிறுவனம் அந்த உடையை பிரத்யேகமாக தயாரித்து வழங்கியுள்ளது. அந்த உடையை அணிந்து கொண்டதும் அவர் நிஜமான நாய் போலவே தோற்றம் தரும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.