• Fri. Mar 24th, 2023

ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள்! – மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளான அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஜல்லிக்கட்டு போட்டிகள் தை பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி மாதத்தில் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தான ஆலோசனை கூட்டம் தற்போது மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

ஆலோசனை கூட்டத்தில் வருவாய் துறை அதிகாரிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். மேலும் தற்போது ஒமிக்ரான் பரவல் அதிகம் உள்ள சூழ்நிலையில், அதுகுறித்தான ஆலோசனைகளும், போட்டியை பாதுகாப்பான முறையில் நடத்துவது, பார்வையாளர்களுக்கு இருக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *