• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ADISSIA நிறுவனம் சார்பில் ஜல்லிக்கட்டு சிலை..,

BySeenu

Aug 28, 2025

கோவை மாநகரின் முக்கியமான இடங்களில் ஒன்றான காளப்பட்டி ரவுண்டானா பகுதியில் ADISSIA Developers pvt lmt நிறுவனம் சார்பில் ஜல்லிக்கட்டு காளையை வீரர் அடக்குவது போன்ற பிரமாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் ADISSIA நிர்வாக இயக்குனர் மணிகண்டன் உட்பட அந்நிறுவனத்தினர் பலர் கலந்து கொண்டனர். கோவையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்காற்றி வருவதாகவும் தொடர்ந்து பங்காற்றுவோம் என்றும் தெரிவித்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மணிகண்டன் தொடர்ந்து திருச்சி மாவட்டத்திலும் இது போன்ற முன்னெடுப்புகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார்.