• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மீண்டும் சர்ச்சை கதையை கையில் எடுத்த ஜெய்பீம் இயக்குநர்

ByA.Tamilselvan

Nov 3, 2022

திரையரங்குகளில் வெளியாகமல் ஒடிடி வெளியாகி மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட படம் ஜெய்பீம் மீண்டும் இந்த கூட்டணியில் ஒரு படம் வெளிவர உள்ளது.
நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெய் பீம்.
நேரடியாக OTT தளத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி இந்தியளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படமாக மாறியது.
மக்களிடயே சிறந்த விமர்சனங்களை பெற்று வெற்றியடைந்த இப்படத்தின் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக ஏற்கனவே சொல்லப்பட்டது. இதனிடையே தற்போது இயக்குநர் ஞானவேல் அளித்துள்ள பேட்டியில் இது குறித்து பேசியுள்ளார். அதன்படி மீண்டும் சூர்யா நடிக்கும் திரைப்படத்தை இயக்க இருப்பதாக ஞானவேல் கூறியுள்ளார். அப்படமும் ஜெய் பீம் போலவே சமூகம் சார்ந்த கதையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
ஜெய் பீம் திரைப்படத்திற்கு முன்பே அப்படத்தின் கதை குறித்து சூர்யாவிடம் சொன்னதாகவும், அப்போதே சூர்யா அப்படத்தில் நடிப்பதை உறுதி செய்தாகவும் கூறியுள்ளார். மேலும் தற்போது அப்படத்தின் ஷூட்டிங் பணிக்கான வேலைகள் நடந்து வருவதாகவும், வரும் மார்ச் மாதம் முதல் ஷூட்டிங் தொடங்கும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.