• Sun. May 12th, 2024

உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்ய தவறியதற்கு மாநில அரசை குற்றம் சாட்டுவது தவறு. சிவகங்கையில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுதர்சன் நாச்சியப்பன் பேட்டி

ByG.Suresh

Dec 24, 2023

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள, தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பிற்கு வானிலை ஆய்வு அறிக்கை 15 தினங்களுக்கு முன்னரே கிடைத்துவிடும். அவர்கள் மாவட்ட ஆட்சியர், கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க மத்திய அரசிற்கு அதிகாரம் உள்ளது. மாநில அரசிற்கு விஞ்ஞான அடிப்படையில் அறிவுரை சொல்ல ஆள் இல்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்ய தவறியதற்கு மாநில அரசை குற்றம் சாட்டுவது தவறு. சிவகங்கையில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுதர்சன் நாச்சியப்பன் பேட்டி.

சிவகங்கை அருகே முத்துபட்டியில் அமைந்துள்ள நறுமணப் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன் நாச்சியப்பன் செய்தியாளர்களை சந்தித்தபோது, மிளகாய், மல்லி , நறுமணப் பொருட்கள் விவசாயிகளின் சங்ககளின் அமைப்புகளை ஒன்றிணைந்து வரும் 26 ஆம் தேதி சாலைகிராமத்தில் ஒன்று கூடி நறுமணப் பூங்காவை பயன்படுத்தி ஏற்றுமதி செய்வது குறித்து முடிவு எடுக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் மோடி குஜராத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருக்கும் அவைக்கு வரமாட்டார். அதனை இப்போது டெல்லியில் செய்ய ஆரம்பித்துள்ளார். ஜனநாயக நாட்டில் மக்களின் குறைகளை கேட்காமல் அவருக்கு பஜனை செய்பவர்களை கொண்டு பாராளுமன்றம் நடத்துவது தான் மோடியின் திட்டம் என குற்றம் சாட்டியவர். மோடி, அமித்ஷா நினைத்தால் ஒரு நிமிடத்தில் மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்சனைக்கு தீர்வு காணலாம். இதனால் ஒலிம்பிக்கில் பெண்கள் மூலம் 10 தங்கப் பதக்கம் பெறுவதை நாம் இழந்திருக்கிறோம் இன்று வேதனை தெரிவித்தார், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள, தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பிற்கு வானிலை ஆய்வு அறிக்கை 15 தினங்களுக்கு முன்னரே கிடைத்துவிடும். அவர்கள் மாவட்ட ஆட்சியர், கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க மத்திய அரசிற்கு அதிகாரம் உள்ளது. மாநில அரசிற்கு விஞ்ஞான அடிப்படையில் அறிவுரை சொல்ல ஆள் இல்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்ய தவறியதற்கு மாநில அரசை குற்றம் சாட்டுவது தவறு. NGO எனும் தன்னார்வ நிறுவனங்கள் வருவதை மோடி தடுக்காமல் இருந்திருந்தால், பேரிடர் காலங்களில் இந்த அளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. காங்கிரஸ் தனியாக தேர்தல் அறிக்கை அமைக்க குழு அமைத்திருப்பதில் தவறில்லை. காங்கிரசின் நிலையினை இந்தியா கூட்டணியில் எடுத்து வைப்போம். பொருளாதாரத்தில் வலிமை குறைந்தவர்களுக்கு, நேரடியா அரசு, அவர்களுக்கு பொருளாதார வலிமையை உருவாக்குவது தான் இலவச திட்டங்கள். திறன் குறைந்தவர்களுக்கு திறனை அதிகரிப்பது தான் இலவச திட்டத்தின் நோக்கம். ரூ. 6 ஆயிரம் நிவாரண நிதி முதல் உதவி தான். சேதத்திற்க்கு ஏற்றவாறு அடுத்தடுத்து உதவிகள் பெறலாம் என சுதர்சன் நாச்சியப்பன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *