• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மழலையர் பள்ளி தொட்டியில் மூழ்கி 4 வயது சிறுமி உயிரிழந்த பரிதாபம்!!

ByKalamegam Viswanathan

Apr 29, 2025

மதுரை மாநகர் கே.கே நகர் விநாயகர் நகர் பகுதியை சேர்ந்த திவ்யா என்பவர் ஸ்ரீ கின்டர் கார்டன் என்ற மழலையர் பள்ளிகளை கே.கே நகர் மற்றும் சின்ன சொக்கிகுளம் ஆகிய பகுதிகளில் சில ஆண்டுகளாக நடத்திவருகிறார்.

இவர் தனது instagram பக்கத்தில் பள்ளி தொடர்பாக குழந்தைகள் வளர்ப்பு குழந்தைகள் பராமரிப்பு தொடர்பாக பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுவந்து பிரபலமானவர் என்பதால் திவ்யாவின் மழலையர் பள்ளியில் பிள்ளைகளை சேர்த்தால் நன்கு திறமையாக படிப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஸ்ரீகின்டர் கார்டன் பள்ளியில் பெற்றோர்கள் தங்களது பள்ளிகளில் சேர்த்துள்ளனர்.

மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கின்டர் கார்டன் மழலையர் பள்ளியில் கோடைகால சிறப்பு முகாம் நடைபெற்றது இதில் 20-க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர்கள் சேர்ந்து பல்வேறு பயிற்சிகளை பயின்றுவந்துள்ளனர்.

இந்நிலையில் மதுரை மாநகர் உத்தங்குடி பகுதியைச் சேர்ந்த சிவ ஆனந்தி மற்றும் அமுதன் தம்பதியினரின் மகளான ஆருத்ரா என்ற 4 வயது சிறுமி இதே பள்ளியில் கோடைகால சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பயிற்சிபெற்று வந்துள்ளார்.

இன்று காலை கோடைகால சிறப்பு முகாமிற்கு வந்த ஆருத்ரா பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது பள்ளியின் பின்புறம் திறந்த நிலையில் கிடந்த தண்ணீர் தொட்டி அருகே சென்று விளையாடியுள்ளார். அப்போது அங்கு திறந்த நிலையில் கிடந்த 12 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிற்குள் எதிர்பாராமல் விழுந்துள்ளார்.

சிறுமி ஆருத்ரா உள்ளே விழுந்தது தெரியாமல் நீண்ட நேரமாக பள்ளிவளாகத்தில் தேடிய ஆசிரியர்கள் ஆருத்ரா தண்ணீர் தொட்டியில் மிதந்தபடி இருப்பதை பார்த்து காப்பாற்ற முயற்சி செய்த நிலையில் அருகில் உள்ளவர்களை காப்பாற்றுமாறு உதவிக்கு அழைத்துள்ளனர்.

அப்போது மருத்துவமனை ஒன்றிற்கு சென்று கொண்டிருந்த மருந்து விற்பனையாளர்கள் 3 பேர் உடனடியாக தண்ணீர் தொட்டிக்குள் குதித்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து மருத்துவமனையில் செல்லும்போதே சிறுமி ஆருத்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணா நகர் காவல் துறையினர் விபத்து நடைபெற்ற பள்ளி வளாகப் பகுதிக்கு சென்று பள்ளி நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தி விபத்து நடைபெற்ற பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்

இதனையடுத்து பள்ளி மாணவி உயிரிழந்ததை பெற்றோருக்கு தெரிவித்த நிலையில் மருத்துவமனைக்கு வந்த ஆருத்ராவின் தாயார் மயங்கி விழுந்த நிலையில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது

பின்னர் தண்ணீர் தொட்டியை திறந்து வைத்து அலட்சியமாக செயல்பட்ட ஸ்ரீ கின்டர்கார்டன் பள்ளி நிர்வாகத்தின் மீது அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்

சிறுமி உயிரிழந்த சம்பவம் நடைபெற்ற பள்ளியில் கோட்டாட்சியர் ஷாலினி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று விசாரணை நடத்திய பின்னர் அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாக சிறுமி உயிரிழந்தது தெரியவந்தது

பின்னர் சிறுமியின் உயிரிழப்புக்கு பள்ளியின் அலட்சியமே காரணம் என்பதால் பள்ளியின் தாளாளர் திவ்யா ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களான மேனகா, ஐஸ்வர்யா, ஜெயபிரியா, சத்யபவானி, சித்ரா, சரிதா ஆகிய 7 பேரையும் அண்ணா நகர் காவல்துறையினர் கைது செய்து அழைத்துசென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் கோடைகால முகாமின் போது பள்ளி வளாகத்தில் திறந்த நிலையில் வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி எழுந்த உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ஸ்ரீ கின்டர் கார்டன் பள்ளியில் படித்த மாணவிகளின் பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் உடனடியாக குழந்தைகளை அழைத்துச் செல்லுமாறு கூறிய நிலையில் பதறியடித்து வந்த பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றபோது தங்களுக்கு எதுவும் தெரியாது நிர்வாகம் குழந்தைகளை அழைத்துச் செல்லுமாறு கூறியதால் தாங்கள் குழந்தைகளை அழைப்பதற்காக வந்தோம் என பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து உயிரிழந்த சிறுமியின் தந்தை அமுதன் செய்தியாளர்களிடம் பேசிய போது ஆசையாக வளர்த்த தனது மகள் உயிரிழந்து விட்டால் இப்படி நடக்கும் என நினைத்து கூட பார்க்கவில்லை மிகுந்த கவலையாக உள்ளது. என்ன செய்வது என்றே தெரியாத மனநிலையில் உள்ளோம் என்றார்.

அமுதன் – சிறுமியின் தந்தை

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் சாலினி மற்றும் துணை ஆணையர் அனிதா, மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் பேசியபோது :

பள்ளி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதாக சிறுமி உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளார். எனவே பள்ளி வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக கோட்டாச்சியர் ஷாலினி தெரிவித்தார்.

பள்ளி சிறுமி உயிர் இழந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பள்ளியின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளன தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக துணை ஆணையர் அனிதா தெரிவித்தார். மதுரை மாவட்டத்தில் 120 மழலையர் பள்ளிகளில் உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்தார்.

மதுரை மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி தாளாளர்கள் நலசங்க தலைவர் கதிரவன் பேசியபோது :

மதுரை மாவட்டத்தில் 180 க்கு மேற்பட்ட மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு உரிய அனுமதியின்றி செயல்படுவதாக மதுரை மாவட்டத்தில் 25 மலர்களைப் பள்ளிகளுக்கு மட்டும் தான் அனுமதி உள்ளது. இது போன்ற விபத்து நடப்பதற்கு முன்பாக அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார் பள்ளிகள் கட்டிடங்கள் அனைத்தும் முடித்து செயல்பாட்டிற்கு வந்த பின்பாக பள்ளிக்கான அனுமதி கேட்டு விண்ணப்பிக்கின்றன இந்த நடைமுறையை மாற்ற வேண்டும் என்றார்.

கதிரவன் – தலைவர், மதுரை மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி தாளாளர்கள் நலச்சங்கம் தண்ணீர் தொட்டியில் சிறுமி விழுந்து உயிரிழந்த விவகாரம் எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் உள்ள மழலையர் பள்ளிகளில் ஆய்வு நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தகவல் தெரிவித்தார்.