• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் தொடர்பாக பல விமர்சனங்கள் வருகிறது.

BySeenu

Feb 26, 2024

ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் தொடர்பாக பல விமர்சனங்கள் வருகிறது. எந்த நிறுவனம் ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்குவதற்கு தகுதியானது என நீங்கள் நினைக்கிறீர்களோ அந்த நிறுவனத்தை எனது அலுவலகத்திற்கு அனுப்புங்கள்.

பாஜகவில் இணைபவர்கள் அனைவரும் எங்கள் கட்சியில் கொள்கையை பிடித்து, புதிதாக வருபவர்களுக்கு அதிகமான வாய்ப்புகளை வழங்குகிறது என்பதை பார்த்து, பிரதமர் மோடியின் செயல்பாடுகளை பார்த்து இந்தக் கட்சி நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறது என்ற உன்னதமான உணர்வோடு வருகிறார்கள்.

பாஜகவில் இணைவதை பார்த்து பொறுக்க முடியாதவர்கள் சொல்வதுதான், இவ்வாறு பணம் நடக்கிறது, இல்லை வேறு ஏதாவது பேரன் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் பிரதிநிதிகள் எதற்காக கட்சியில் இணைந்தோம் என அவர்களே கூறி விட்டார்கள்..

மக்கள் பிரதிநிகளை இழுத்து வர முடியுமா? அவர்களே முடிவு செய்யாமல் பாஜகவினர் இழுத்து வர முடியுமா? வீட்டில் இருக்கும் குழந்தைகளை கூட இழுத்து வர முடியாது.

மக்கள் பிரதிநிதிகளுக்கு இந்த நேரத்தில் பாஜகவில் இணைந்தால் சரியாக இருக்கும் என தோன்றுகிறது.

ஏனென்றால் அவர்கள் இருக்கும் கட்சி அவர்களுக்கு சரியில்லை. அடுத்து வருவதும் பாஜக ஆட்சி தான் என மிக உறுதியாக தெரிகிறது.

இவர்களோடு இணைந்தால்தான் அரசியல் லட்சியங்களை நிறைவேற்ற முடியும் என்பதை உணர்ந்து இருக்கிறார்கள்..

வாய்ப்புகள் கொடுக்கும் இடம், அடுத்த கட்ட வருங்காலம் இருக்கும் இடம் பாஜக தான்.

விஜயதாரணி இன்றைய தேதியில் காங்கிரஸ் கட்சியில் இருந்த இடர்பாடுகளை கூறி இருக்கிறார். அவரின் உழைப்பு , திறமை ஆகியவற்றிற்கான அங்கீகாரம் பாஜக தரும்.

மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் தங்களது கடமைகளை அந்த இடத்தில் சரியாக செய்ய முடியவில்லை என்ற மன அழுத்தத்தின் காரணமாக அல்லது பிரச்சினைகளின் காரணமாக கூட வரலாம் அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

எங்களை எதிர்த்துப் பேசுபவர்கள் நாட்டுக்காக வேலை செய்ய பாஜகவில் இருந்தால் வாருங்கள் என்று தான் கூறுவோம்.

எனது விருப்பமோ, விருப்பமின்மை குறித்தோ பேசுவதற்கு கட்சிகள் ஒரு இடத்தை கொடுத்திருக்கிறார்கள் அந்த இடத்தில் கூறுவேன்- கோவையில் வானதி போட்டியிடுவதாக விருப்பம் தெரிவித்திருக்கிறாரா என்ற கேள்விக்கு பதில்..,

பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் ஒவ்வொரு முறையும் பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்கிறது.

மதுரை எய்ம்ஸ் குறித்து பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் பலமுறை பதில் கூறி விட்டார்கள். திரும்பத் திரும்ப எய்ம்ஸ் எய்ம்ஸ் என்றால், ஒற்றை செங்கலை வைத்து சுற்றுகிறீர்களே! ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிறது ஏன் நடத்தலை..