• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மேய்ச்சலுக்கு அழைத்து சென்றால் பாதுகாப்பு இல்லையா?

Byஜெ. அபு

Aug 3, 2025

வனப்பகுதிக்குள் நாட்டு இன மாடுகளை மேய்ச்சலுக்கு செல்ல வனத்துறையினர் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இதனை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை நாட்டு இன மாடுகளை மேச்சலுக்கு அழைத்துச் செல்லும் போராட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே குரங்கணி செல்லும் சாலையில் சுமார் 1000 நாட்டு இன மாடுகளை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக அழைத்து சென்று வனத்துறையினர் அனுமதியை மீறி நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாடுகளை மலை மேல் ஏற்றி மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.

அப்போது சீமானை வனத்துறை அலுவலர் நாகராஜன் அன்பரசன் உள்ளிட்ட வனத்துறையினர் தடுத்து மலை மேல் மாடுகளை ஏற்றி செல்ல மறுத்தனர். இதனால் சீமான் வனத்துறை அலுவலர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை அடுத்து தடையை மீறி சீமான் விவசாயிகளுடன் 1000 நாட்டு இன மாடுகளை மலை மேல் ஏற்றி மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். இதனால அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான் கூறுகையில்,

எங்கள் கோரிக்கைகளை ஏற்காமல் தடை செய்தால் மீண்டும் மாடுகளை மலை மேல் ஏற்றி போராட்டம் நடத்துவோம். மாடுகளை மலை மேல் ஏற்றி செல்ல தடை என அறிவித்துள்ளீர்கள் அதற்கு மாற்று இடம் ஏன் அறிவிக்கவில்லை.

எத்தனை ஆண்டுகளாக மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்கிறோம். திடீரென்று வனவிலங்குகள் மீது உங்களுக்கு அக்கறை வந்தால் நாங்கள் எங்கள் மாடுகளை எங்கே சென்று மேய்ப்பது.

வெடிகளை வைத்து மலைகளை தகர்க்கும் போது பாதுகாப்பாக இருக்கும் வனவிலங்குகள், எங்கள் மாடுகள் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றால் பாதுகாப்பு இல்லையா?

கால்நடைத்துறை ஒன்று இருக்கிறது அதற்கு அமைச்சர் என்றும் இவர் இருக்கிறார் ஆனால் மாடுகளை பாதுகாக்க முடிவதில்லை என்று தெரிவித்தார்.