• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விஜய் பற்றிவனிதா விஜயகுமார் பேசுவது வாய்க் கொழுப்பா எதார்த்தமா?

சினிமா வாழ்க்கையில் முதல் சுற்றில் தோல்வியை தழுவி, திருமணம் செய்துகொண்டு செட்டிலானவர் வனிதா விஜயகுமார் திருமண வாழ்க்கை சிக்கலாகி விவாகரத்து வாங்கினார் அதன் பின் அப்பா விஜயகுமாருடன் தகராறு, இரண்டாவது திருமணம் என தொடர்ந்து சர்ச்சை அதன்மூலம் ஊடக வெளிச்சம் என எப்போதும் லைம்லைட்டில் இருந்த வனிதா விஜயகுமாருக்கு வரிசையாக படங்களில் நடிக்கும் வாய்ப்புக்கள் குவிந்து வருகிறது கமிட்டாகி நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு, திரைப்பட விழா பங்கேற்பு என பிசியாக வலம் வரும் வனிதா விஜயகுமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் விஜய் குறித்து பேசியுள்ளார்.அந்த பேட்டியில் பேசியுள்ள வனிதா, ‘விஜய்யுடன் நான் நடித்த காலக்கட்டங்களில் அவரிடம் எப்படி பேசினேனோ அப்படியே தான் இன்றைக்கு பேசுவேன். திடீரென்று அவரை அவர் இவர் என்று மரியாதையுடன் பேசுவதாக நினைத்து மாற்றி பேச முடியாது. இன்று நான் அவரிடம் பேசுவதை நினைத்து பலருக்கு நான் ஏதோ மரியாதை குறைவாக திமிரில் பேசுவதாக தோன்றலாம்.

ஆனால் நான் ஆரம்பத்தில் இருந்தே அவருடன் அப்படி தான் பேசி பழகியிருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.இதனால், சில விஜய் ரசிகர்கள் வனிதா மீது கோபமடைந்துள்ளனர். அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.