• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வடிவேலுவின் கம்பேக் சம்பளம் இவ்வளவா?

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. எக்கச்சக்கமான படங்களில் நடித்து வந்த இவர் சங்கரின் தயாரிப்பில் உருவாக இருந்த இருபத்தி நான்காம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பிறகு ஏற்பட்ட பிரச்சனையால் இவருக்கு ரெக்கார்ட் போடப்பட்டு பல வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.

இதனையடுத்து தற்போது லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் ஹீரோவாக ரீ என்ட்ரி கொடுக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மேலும் வடிவேலுவை ஹீரோவாக வைத்து படத்தை இயக்க நலன் குமாரசாமி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் போட்டி போட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திற்காக நடிகர் வடிவேலு ரூபாய் 10 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்கள் ஆக இருப்பவர்களின் சம்பளத்தில் பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு வடிவேலுவின் சம்பளம் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.