• Mon. Jan 5th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இதுதான் தங்கத் தேரா? அதிர்ந்து போன அமைச்சர் சேகர் பாபு

Byமதி

Sep 28, 2021

இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தொடர்ந்து பல கோவில்களுக்கு சென்று ஆய்வு நடத்திவருகிறார். இந்தநிலையில் சமீபததில் மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில், அழகர்கோயில், சோலைமலை முருகன் கோயில்களில் நடந்து வரும் திருப்பணிகளை பார்வையிட்டார். இதையடுத்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று ஆய்வு நடத்தினர்.

கோயிலின் பல பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தவர், தங்கத்தேர் இருக்கும் பகுதிக்கு வந்தார்.

‘ இதுதான் தங்கத்தேர்’ என்று கோயில் அதிகாரிகள் காட்ட, கறுப்பாக காட்சியளித்த அந்த தேரை பார்த்து, ‘இதுதான் தங்கத்தேரா?’ என்று சந்தேகத்துடன் கேள்வி எழுப்பினார்.

தங்கத்தேர் கறுத்துப்போனது பற்றி பொதுமக்கள் மத்தியில் அதிருப்பதி மற்றும் சந்தேகம் இருப்பதை செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்ட அமைச்சர், தேருக்குப் பயன்படுத்திய தங்கத்தில் முறைகேடு நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்யப்பட்டு அதில் தவறு நடந்திருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார். மேலும் அவரிடம்தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படுவார்களா?” என்று கேட்டதற்கு, “கொரோனா பரவல் முழுமையாக குறைந்ததும் தீர்த்தங்களில் நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்” என்றார்.