யாராக இருந்தாலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டால் சிறைக்கு அனுப்புவது சரியாகத்தான் இருக்கும் அப்படி என்றால் தான் லஞ்சம் ஊழல் போன்றவற்றை ஒழிக்க முடியும்
எம்ஜிஆர் அண்ணா படத்தை வைத்துக்கொண்டு அவர்கள் துவங்கிய கட்சியை ஒழிக்க வேண்டும் என பேசுகிறார்கள்

வாரிசு அரசியலை எதிர்க்க வேண்டும் என்றால் முதலில் காங்கிரசையும் எதிர்க்க வேண்டும் ஒருபுறம் மயிலிறகால் தடவிக் கொண்டு ஒருபுறம் உருட்டு கட்டையால் அடிக்கக் கூடாது
திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்:-
இது போன்று பல சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது ஜனநாயகம் வெற்றுவார்த்தையாகிவிடும் அது மட்டுமின்றி வாக்குக்கு பணம் கொடுத்து விலைக்கு விங்கி வருகின்றனர்.
வாக்கிற்க்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களுக்கு பத்தாண்டு சிறை என கூறி பாருங்கள் அந்த முறை ஒளிந்து விடும் அது போன்று பதவிக்கு வருபவர் தண்டனை பெற்றால் அவரை சிறைக்கு அனுப்பவும் என்பது சரியாக தான் இருக்கும் அப்படி இல்லையென்றால் லஞ்சம் வாங்குவது குற்ற செயல்களில் ஈடுபடுவது தடுக்க முடியாது..
நாடே ஒரு குற்ற சம்பவமாகத்தான் போகும் எந்த நாட்டில் நீதிபதி கடவுளாக கருதப்படுகிறாரோ அங்கு குற்ற சம்பவம் அதிகமாக இருக்கிறது.

மருத்துவர் கடவுளாக எங்கு பார்க்கப்படுகிறாரோ அங்கு நோயாளி அதிகமாக இருப்பான். இது எல்லாம் இல்லாத ஒரு நாட்டை தான் நாம் எதிர்பார்க்கிறோம் அதற்காக இந்த சட்டத்தை வரவேற்கிறோம் ஆனால் இந்த சட்டத்தை கொண்டு போக வருபவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பேனர்கள் அகற்றப்படுவது குறித்து கேட்டபோது ,
அவர்களுக்காவது பேனர்கள் வைத்தபிறகு அகற்றுகிறார்கள் எங்களை வைக்க விடாமல் தடுக்கிறார்கள் கொடி போஸ்டர்கள் அனைத்தையும் பறித்து விடுகிறார்கள்.
காவல் நிலையத்தில் வைத்து கொடுமைப்படுத்தியதெல்லாம் உள்ளது அது எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது விஜய் கட்சி துவங்கும்பொழுது ஆதரித்தேன் ஆனால் அவர்களின் செயல்பாடுகளை பொறுத்து தான் அண்ணன் தம்பி அப்பா அம்மா என்ற உறவு தீர்மானிக்கப்படுகிறது
நீங்களும் அதே திராவிடம் அதே கொள்கை திமுகவை ஒழிப்பது மட்டும் லட்சியமாக இருந்தால் ஏற்று கொள்ள முடியாது நாட்டிற்கு என்ன செய்வேன் என்பதை யாவது கூற வேண்டும்.
மீண்டும் அண்ணா எம்ஜிஆர் படங்களை கொண்டு வருகிறார்கள் அப்படி என்றால் முதலிலேயே கொண்டு வந்திருக்க வேண்டும் அவர்கள் படத்தை வைத்துக்கொண்டு அவர்கள் துவங்கிய கட்சியை ஒழிக்க வேண்டும் என பேசுகிறார்கள்.
அடுத்த மாநாட்டிற்கு எடப்பாடி ஜெயலலிதா படங்கள் வைக்கப்படுமா ஒவ்வொரு நேரத்திற்கு ஒவ்வொரு முடிவு எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது.
அது அவர்களைப் பின்பற்றும் நண்பர்கள் நண்பிகளாக இருக்கலாம் எனக்கு அண்ணன் தம்பிகளாக இருக்கலாம் அவர்களுக்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறோம்
அவர்களுக்கு சரியான அரசியலையும் சரியான பாதையையும் காட்ட வேண்டியது நமது கடமை அதற்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும் ஒரு நிலைப்பாடு எடுத்துக் கொண்டால் அதில் உறுதியாக இருக்க வேண்டும்.
அதே திராவிட கொள்கையில் சித்தாந்தத்தை எடுத்து வருவதற்கு இங்கு ஒரு புதிய அரசியல் தேவை இல்லை அதான் அவர்கள் ஏற்கனவே இருக்கிறார்கள் வாரிசு அரசியலை விஜய் எதிர்க்கிறாரா அப்படி மன்னர் ஆட்சி எனக் கூறியுள்ளார் அப்படி என்றால் முதலில் காங்கிரஸ் தான் எதிர்க்க வேண்டும் வேறு நேரு மகன் நேரு பேரன் அதைப் பற்றி ஏன் பேசவில்லை தவறு யார் செய்தாலும் தவறுதான் அதைப் பற்றியும் பேச வேண்டும்.
நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே இந்த பரம்பரையில் வந்துவிட்டு நாம் அப்படி பேசக்கூடாது வாரிசு அரசியலை கூடாது என்றால் முதலில் காங்கிரஸ் தான் ஒலிக்க வேண்டும் அதைப் பேசிவிட்டு தான் இதையும் பேச வேண்டும் ஊழல் என்றால் ஊழலுக்காகவே சிறை சென்ற கட்சி இருக்கிறது அல்லவா அதையும் பேச வேண்டும் ஒரு பக்கம் மயிலிறகால் தடவி விட்டு ஒரு பக்கம் கட்டை கம்பால் அடிக்க கூடாது அது சரியான வழிகாட்டுதலாக இருக்க கூடாது.
கேரளாவில் வயநாட்டில் போட்டியிடுவதற்கு வேறு யாரும் இல்லையா? அண்ணன் தங்கை…. போங்க தம்பி….