• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரையில் மக்கள் தேசம் கட்சி பறையர் பேரவையின் சார்பில் கோவில் திருவிழாவில் முறைகேடு: காவல்துறை ஆணையரிடம் புகார் மனு

Byகுமார்

Jun 2, 2024

மதுரையில் மக்கள் தேசம் கட்சி பறையர் பேரவையின் சார்பில் கோவில் திருவிழா நடத்துவதில் நடந்த முறைகேடுகளை சுட்டிக்காட்டி காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

மதுரையில் மக்கள் தேசம் கட்சி பறையர் பேரவையின் சார்பில் ஆதி திராவிட பறையர்களுக்கு சொந்தமான கோவில் புது விளாங்குடி. நேதாஜி மெயின்ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீகாளிஸ்வரி அம்மன் திருக்கோவில் கோவில் திருவிழா நடத்துவதில் நடந்த முறைகேடுகளை சுட்டிக்காட்டி மக்கள் தேசம் கட்சி பறையர் பேரவை
மாவட்டச் செயலாளர் சேவியர் இருதயராஜ், பூமிநாதன் சிங்கராஜன், டெலிபோன் ரவி, போஸ், ராஜன் மற்றும் கிராம பொதுமக்கள் காவல்துறை ஆணையரிடம்
சம்மந்தப்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் வரக்கூடாது எனக் கூறியும், அத்துமீறி நுழைந்தவர்கள் மீதும் உடந்தையாக இருந்தவர்கள் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் சேவியர் இருதயராஜ் கூறியது, கோவிலில் நடைபெற்ற முறைகேடுகளை சுட்டி கட்டியதால் திருவிழா நடத்தாமல் தடையாக உள்ளவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.