இளவட்ட 11_ கல்களை (எடை.1210))கிலோ ஒன்றன் பின் ஒன்றாக 10_நிமிடத்தில் தூக்கி உலக சாதனை சான்று பெற்ற இரும்பு மனிதன் கண்ணன்.
கன்னியாகுமரியை அடுத்துள்ள பால்குளம் பகுதியில் உள்ள ரோகிணி பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாணவ,மாணவியர்கள் கூட்டமாக கூடி நின்று கை ஒலி எழுப்பி. இரும்பு மனிதன் கண்ணன் உற்சாகமாக 94டை கொண்ட முதல் இளவட்ட கல்லை அனசயமாக தோள் மீது தூக்கி அவர் உடலுக்கு பின் போட்டார்.

இரும்பு மனிதன் கண்ணன் வெவ்வேறு எடைகளில் உள்ள 11_கல்கள் வரிசையில் 11_வது கல் 141 கிலோ எடை உடையை கல்லையும் தூக்கி.சோழா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
இரும்பு மனிதன் கண்ணனின் சாதனையை பாராட்டி சோழா உலக சாதனை புத்தக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நீலமேக நிமிலன் இரும்பு மனிதன் கண்ணனின் சாதனையை பாராட்டி சான்றிதழ் (CERTIFICATE) வழங்கினார்.
கண்ணனின் இளவட்ட கல் தூக்கும் நிகழ்விற்கு சரவணன் சுப்பையா தலைமை தாங்கினார். நிகழ்வில் ரோகிணி பொறியியல் கல்லூரியின் முதல்வர்
முனைவர் ராஜேஷ், துணை முதல்வர் ஜெயமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இரும்பு மனிதன் கண்ணன் குறித்த நேரத்தில். வெவ்வேறு எடைகளை கொண்ட 11_இளவட்டகல்லை (1210)கிலோ எடை உடையை கற்களை தூக்கிய, இரும்பு மனிதன் கண்ணனின் உடல் எடை 90_கிலோ மட்டுமே என்பதை கேட்டதும் கூடி நின்ற மாணவ, மாணவிகள் ஆச்சரியத்தில் புருவங்கள் வில்லாக விரிய உற்சாகத்துடன் கை ஒலி எழுப்பி இரும்பு மனிதன் கண்ணனை உற்சாகப் படுத்தினார்கள்.