குமரி மட்டும் அல்ல ஒட்டுமொத்த தேசிய நொஞ்சங்களே நெல்லைக்கு
வாருங்கள். அலைகடலென அணி திரண்டு பெரும் திரளுடன் பங்கேற்போம் : நெல்லையில் நாளை நடக்கும் மாநாட்டிற்கு நாளை 07.09.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கரங்களை வலுப்படுத்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கு. செல்வப்பெருந்தகை அவர்களின் தலைமையில் ஒட்டு திருட்டுக்கு எதிராக நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் மாநில மாநாட்டிற்கு காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக கூட வேண்டும் என கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தல்களிலும், மாநில அளவிலான தேர்தல்களிலும் மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையில் நடைபெற்ற ஒட்டு திருட்டு மற்றும் அதனுடன் தொடர்புடைய முறைகேடுகளை எதிர்த்து, ஜனநாயக மதிப்புகளை நிலைநாட்டும் நோக்கில் காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகின்றது. பீகார் மாநிலத்தில் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் மாபெரும் பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை மாலை திருநெல்வேலி பெல் பின் மைதானத்தில் மாபெரும் மாநாடு ஓன்று நடத்தபடுகிறது. வீரத்திற்கும்,தியாகத்திற்கும் பெயர் பெற்ற நெல்லை மண்ணில், மக்கள் குரல் கேட்கப்பட வேண்டும்; மக்களின் வாக்குரிமை மதிக்கப்பட வேண்டும் என்பதற்கான காங்கிரஸ் கட்சியின் உறுதியை இந்த மாநாடு வெளிப்படுத்தும்.
இந்த நிகழ்வில் மாநிலம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள், துணை அமைப்பின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டின் மூலம் மக்களிடம் நேரடியாகச் சென்று ஜனநாயகத்தை காக்கும் பணியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவோம்.
நமது தலைவர் ராகுல் காந்தி அவர்கள் நடத்தி வரும் சத்தியம், உண்மை, ஜனநாயகம் என்ற பாதையை வலுப்படுத்தும் விதமாக இந்த மாநாடு அமையும். இந்திய நாட்டிற்கும், நாட்டு மக்களின் நலனுக்கும் குரல் கொடுத்து வரும் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் கரங்களை வலுப்படுத்த வேண்டியது நமது கடமை. நாம் நெஞ்சை நிமிர்த்தி நான் காங்கிரஸ்காரன் என கூறி பெருமை அடையும் விதத்தில் இந்த மாநாட்டை வெற்றி பெற செய்ய வேண்டும்.

ஜனநாயக ரீதியாக நடைபெற வேண்டிய தேர்தலில் மக்களின் வாக்குரிமையை காக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இந்த மாநாடு வாக்குரிமையை காக்கும் மாநாடு ஒவ்வொரு காங்கிரஸ் தோழர்களுக்கும் அன்பான வேண்டுகோள் அனைவரும் பல்லாயிரக்கணக்கில் அலைகடலென அணி திரண்டு வந்து, பெரும் திரளுடன் பங்கேற்று, காங்கிரஸ் கட்சியின் குரலாக, மக்களின் குரலாக, ஜனநாயகத்தின் குரலாக இந்த மாநாட்டை வெற்றி பெற செய்வோம். நெல்லையில் நாம் எழுப்பும் ஒலி டெல்லி வரை கேட்க செய்வோம்.
கும்பணியை அடிபணிய செய்த கட்டபொம்மன் வாழ்ந்த நெல்லை மண்ணிலிருந்து நமது வலிமையை வெளிப்படுத்தி ஜனநாயக விரோத சக்திகளை அடிபணிய செய்வோம். என் விஜய் வசந்த் அவரது அழைப்பு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.






; ?>)
; ?>)
; ?>)
