அரியலூர் மாவட்ட திமுக அலுவலக கூட்டரங்கில் ,அரியலூர் நகரம் திமுக நிர்வாகிகள், 18 வார்டு செயலாளர்கள், அரியலூர் மத்திய, வடக்கு, தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள், மற்றும் கிளை கழக செயலாளர்கள் உள்ளிட்ட திமுக வினரை நேரில் அழைத்து, அவர்களிடம், வரும் டிசம்பர் 05 தேதி,அரியலூர் பெரம்பலூர் பைபாஸ் ரோட்டில் மாவட்ட திமுக சார்பில் புதிதாக கட்டப்படவுள்ள கலைஞர் அறிவாலயம் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவிற்கான அழைப்பிதழ்களை,மாவட்ட திமுக செயலாளர், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி .சிவசங்கர் வழங்கி, அடிக்கல் நாட்டு விழாவில் அனைத்து பொறுப்பாளர்களும், பங்கேற்று, விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில், மாவட்ட திமுக துணைச் செயலாளர்கள் அருங்கால் சி.சந்திரசேகர், லதா பாலு,நகர திமுக செயலாளர் இரா.முருகேசன், ஒன்றிய திமுக செயலாளர்கள் கோ.அறிவழகன்,மா.அன்பழகன்,தெய்வ இளைய ராஜன், நகராட்சி சேர்மன் சாந்தி,துணைச் சேர்மன் தங்க கலியமூர்த்தி, மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.









