இந்தியாவின் முன்னணி தேர்வு தயாரிப்பு நிறுவனமான ஆகாஷ் எஜுகேஷனல் நிறுவனம் கடந்த 16 ஆண்டுகளாக முன்னனி தேர்வுகளை எதிர் கொள்ளும் மாணவர்களை தயார் படுத்தும் விதமாக பல்வேறு செயல்திட்டங்களை செயல் படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பொறியியல் மாணவர்களுக்கான முதன்மை தேர்வான ஜே.இ.இ.தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் படுத்தும் விதமாக இன்விக்டஸ் எனும் முன்னோடி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்து,இதில் மாணவர்கள் பல புதிய சாதனைகளை படைத்தும் வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஆகாஷ் இன்விக்டஸ் சேர்க்கைக்கான இன்விக்டஸ் ஏஸ் டெஸ்ட் ஐ துவங்கி உள்ள நிலையில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆகாஷ் கல்வி சேவைகள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியும்,மேலாளருமான தீபக் மெஹ்ரோத்ரா இது குறித்து கூறுகையில், இந்தியாவின் மற்றும் வெளிநாட்டு புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை இலக்காகக் கொண்ட உயர்தர பொறியியல் விருப்பமுள்ள மாணவர்களுக்காக இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதில் , கடந்த ஆண்டில் 1 மில்லியனை தாண்டிய மாணவர்கள் தேர்வில் போட்டியிட்டு புதிய சாதனையை ஏற்படுத்தியதாக கூறிய அவர்,
5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவருக்கான ரூபாய் 250 கோடி மதிப்புள்ள அதிகமாக 100% வரை பன்னல் நிதிகள் மற்றும் 2.5 கோடி மதிப்புள்ள பண பரிசுகள் வழங்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆந்தே தேர்வுகள் ஆன்லைன்,மற்றும் ஆஃப்லைன்களில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என கூறினார். ஆந்தே தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஆகாஷ் கிளாஸ்ரூம், , டிஜிட்டல், மற்றும் இன்விக்டஸ் படிப்புகளில் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார்..
முன்னதாக கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆகாஷ் கோவை மண்டல நிர்வாகிகள் குடே சஞ்சய் காந்தி,சங்கர் குரு,பிரதீப் உன்னி கிருஷ்ணன்,மலர் செல்வன்,செந்தில்குமார் ஆகியோர் இருந்தனர்.








