டி.வி.எஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் எண்டார்க் 125 ஸ்கூட்டர் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் நிலையில், அதனை காட்டிலும் அளவில் பெரியதாகவும், பவர்ஃபுல்லான என்ஜினை கொண்ட, புதிய டி.வி.எஸ்.’எண்டோர்க் 150′ (Ntorq 150) ஸ்கூட்டர் அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவின் முதல் ‘ஹைப்பர் ஸ்போர்ட்’ (Hyper Sport) ஸ்கூட்டராக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டிவிஎஸ் எண்டோர்க் 150 ஸ்கூட்டர் குறித்து டி.வி.எஸ்.மோட்டார் நிறுவனம் சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது..
இதில்,டி.வி.எஸ்.மோட்டார்ஸ் பிராண்ட் மேனேஜர்கள் ரோனிகா,அபினவ் சர்மா மற்றும் தமிழ்நாடு ஏரியா மேனேஜர் வினீத் ஆகியோர் புதிய டி.வி.எஸ்.’எண்டார்க் 150′ (Ntorq 150) ஸ்கூட்டரை கோவையில் அறிமுகம் செய்து வைத்து பேசினர்..

புதிய ஜி.எஸ்.டி.வரி மாற்றத்திற்கு பிறகு ஷோரூம் விலையாக ரூபாய் 1.09.400 ஒரு இலட்சத்தி ஒண்பாதயிரத்தி நானூறு ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்..
புதிய எண்டார்க் 150 ஸ்கூட்டரில் 149.7சிசி, 3-வால்வு, ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது.
அதிகப்பட்சமாக 7,000 ஆர்பிஎம்-இல் 13.2 பிஎஸ் மற்றும் 5,500 ஆர்பிஎம்-இல் 14.2 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு உள்ளது. 0-இல் இருந்து மணிக்கு 60கிமீ வேகத்தை வெறும் 6.3 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய புதிய எண்டார்க் 150 ஸ்கூட்டரின் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 104கிமீ என தெரிவித்தனர்..
இதன் மூலமாக, இந்தியாவிலேயே அதிவேகமான 150சிசி ஸ்கூட்டராக புதிய டிவிஎஸ் எண்டோர்க் 150 அறியப்படுகிறது.
புதிய எண்டோர்க் 150 ஸ்கூட்டர்,12 இன்ச்சில் அலாய் சக்கரங்களை கொண்டு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்பட்டு உள்ளன. பிரேக் பகுதியில் , முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்தில் டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டு உள்ளன.
இவற்றுடன் பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்கு சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் (ABS) வசதியையும் எண்டார்க் 150 ஸ்கூட்டரில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்…