• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வயிறு மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட எண்டோஸ்கோபி சிகிச்சை அறிமுகம்

BySeenu

Sep 13, 2024

கோவை ஜெம் மருத்துவமனையில் தமிழகத்தில் முதல்முறையாக வயிறு மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட எண்டோஸ்கோபி சிகிச்சையை அறிமுகம் செய்தது.

கோவை ஜெம் மருத்துவமனை பியூஜிபிலிம் இந்தியா (FUJIFILM INDIA) எனும் நிறுவனத்துடன் கைகோர்த்து இரைப்பை குடல் பகுதிகளில் ஏற்படக்கூடிய புற்று நோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவும் அதிநவீன CAD EYE Artificial Intelligence எனும் சாதனத்தை தமிழகத்தில் முதல்முறையாக அறிமுகம் செய்தது.

இந்த கருவியை ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேலு, ஜெம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் பிரவீன் ராஜ் மற்றும் தலைமை இயக்கு அதிகாரி டாக்டர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலையில் அறிமுகம் செய்து வைத்தார். இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சாதனம் கோவை மருத்துவ துறை அரங்கில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று கருதப்படுகிறது. இது பற்றி ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பழனிவேலு செய்தியாளர்களிடம் கூறுகையில்:-கடந்த 10 ஆண்டுகளில் வயிற்று புற்றுநோய் ஏற்படுவது என்பது பல மேற்கத்திய நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் அதிகமாக உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் இது போன்ற ஆபத்தான நோய்களை முன்கூட்டியே கண்டறிவது என்பது மிகவும் அவசியமானது. இதற்கு ஜெம் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தி இருக்கக்கூடிய CAD EYE Artificial Intelligence எனும் சாதனம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.ஒருவரின் உடலில் கட்டி என்பது பெருங்குடல் பகுதியில் இருந்தாலும் வயிற்று பகுதியில் இருந்தாலும், அதை ஆய்வு செய்கையில், இந்த CAD EYE Artificial Intelligence சாதனம் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தகவல்களை வழங்கி அந்தக் கட்டிகளின் தன்மை என்னவென்று மிக தெளிவாக வெளிப்படுத்தும். நோய்களைக் கண்டறிய முன்னெடுக்கப்படும் ஆய்வுகளை மிகவும் துல்லியமாக, விரைவாக செய்ய இந்த சாதனம் உதவிகரமாக இருக்கும் என்பதால் இதன் மூலம் சிகிச்சைகளை மருத்துவர்கள் விரைந்து துவங்கவும் அது வெற்றிகரமாக முடியவும் நல்ல வாய்ப்புகள் உள்ளன.

இப்படிப்பட்ட ஒரு கருவியை மக்கள் நலனுக்காக அறிமுகம் செய்வதில் ஜெம் மருத்துவமனை மகிழ்ச்சி அடைகிறது.இவ்வாறு அவர் கூறினார்.