தொகுதி மறுசீரமைப்பு வரையரை குறித்து பாஜக மாநில தலைவருக்கே புரிதல் இல்லை, திமுக மட்டும் அல்ல பாதிக்கும் மாநில கட்சிகளும் இதனை பிரச்சினையாக பேசுகிறார்கள் விசிக தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.
டெல்லி செல்லும் முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்.பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ,

இந்தியா எனும் நாடு உருவாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தான் காரணம், நாடு சுதந்திரம் அடையும் முன்னர் பல்வேறு மாகணங்களை அவர்கள் உருவாக்கினார்கள் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு பதில் அளித்தார்.
தொகுதி மறு சீரமைப்பு வரையரை குறித்து பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலைக்கே புரிதல் இல்லை, திமுக மட்டும் எதிர்க்கவில்லை, பாதிக்கும் மாநிலங்கள் அதன் கட்சிகளும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதுகுறித்து முழு அளவில் புரிதல் ஏற்பட்டால் அவரும் அதரவு அளிப்பார் என்றார்.