நாளை நான் எடப்பாடி பழனிசாமி சந்திக்கப் போகிறேன் ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சி எங்கள் கூட்டணிக்கு வந்துள்ளது.
ஏற்கனவே பத்திரிகையாளர்கள் எங்கள் கூட்டணிக்கு யாரும் வரவில்லை என்று கூறினார்கள்.
முதல் கட்டமாக அன்புமணி ராமதாஸ் வந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அமித்ஷா எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு நடந்துள்ள.
அடுத்து நானும் எடப்பாடி பழனிச்சாமியும் சந்தித்து பேசி அடுத்த கட்ட முடிவு எடுப்போம்.
யாருக்கும் பாஜக நெருக்கடி கொடுக்காது.எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் சுதந்திரமாக செயல்படுவார்கள்.
எங்களுக்கு தகுதி எத்தனை என்பது முக்கியமல்ல.
யார் முதலமைச்சராக இருக்க கூடாது என்பது தான் முக்கியம்,
ஓபிஎஸ் விவகாரம் குறித்து நான் கருத்து சொல்ல முடியாது.
ஜனநாயகன்படம் மட்டுமல்ல நிறைய படங்களுக்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது அதற்காக ஒரு பிரதமரை குறை சொல்ல முடியாது.
சென்சார் போர்டைத்தான் கேட்க வேண்டும்,இது குறித்து பிரதமரை கேட்க முடியாது.
காங்கிரஸ் கட்சி தவெகவுடன் பேசி இருக்கலாம் என்று நான் கூறியிருந்தேன், ஒருவேளை அதன் அடிப்படையில் தற்போது அவர்கள் தவெக நெருங்குகிறார்களா என்பது தெரியவில்லை-




