• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மான்ட்ஃபோர்ட் சமூக மேம்பாட்டு சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா

Byஜெ.துரை

Mar 19, 2023

சென்னை அடையாரில் அமைந்துள்ள சாஸ்த்திரி நகர் நலசங்க மண்டபத்தில் மான்ட்ஃபோர்ட் சமூக மேம்பாட்டு சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சி மான்ட் ஃபோர்ட் கம்யூனிட்டி டெவலப்மெண்ட் சொசைட்டி இயக்குனர் ஜோசப் லூயிஸ், மான்ட் ஃபோர்ட் கவுன்சிலிங் தலைவர் டாக்டர் ஜார்ஜ் , நிஜு தாமஸ்,சூசைராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். குத்து விளக்கேற்றி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மாணவிகளின் நடனம், சிலம்பாட்டம்,பரத நாட்டியம் கவிதை,பேஷன் ஷோ போன்றவைகளும் இடம்பெற்றன வெற்றியாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.


இந்த மகளிர் தின விழாவிற்கு வளசரவாக்கத்தில் அமைந்துள்ள ஜீவராக்ஷாய் என்னும் தனியார் அறக்கட்டளையின் நிறுவனர் A.C.N. அருணா அவரது சார்பில் அனைவருக்கும் குளிர் பானங்கள் வழங்கப்பட்டது. பெசன்ட் நகர் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் ஸ்ரீதேவி, தே.மு.தி.க. தென் சென்னை தெற்கு மாவட்ட கழக துணை செயலாளர் S.கலா’செல்வம்,176வது வட்ட வார்டு கவுன்சிலர் ராதிகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மற்றும் திருவான்மியூர் மகளிர் சுய உதவி குழு பேரவை தலைவி இராஜேஸ்வரி, வள்ளுவர் நகர் பூரணி, கௌசல்யா,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பாரதி, கவிதா, மற்றும் வள்ளுவர் நகர் ,கண்ணகி நகர்,அடையார், போன்ற பகுதிகளில் உள்ள 39 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள பெண்கள் சுமார் 565க்கு மேற்பட்டோர்கள் கலந்துகொண்டனர்.