தமிழக சுற்றுலா வாரியத்தின் சார்பில், கன்னியாகுமரியில் உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகில் பயணித்து சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை, கன்னியாகுமரி சுற்றுலாதுறை அலுவலர் காமராஜ், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தமிழர் பண்பாட்டு பாரம்பரிய முறைப்படி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நெற்றியில் சந்தனத்தால் திலகம் இட்டு சங்கு மாலை அணிவித்து வரவேற்றதுடன், இனிப்பு வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி சுற்றுலா துறை அலுவலர் காமராஜ் செய்தியாளர்களிடம்..,
உலக சுற்றுலா தினமான முதல் நிகழ்வாக வெளி நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தமிழ் பாரம்பரிய படி நெற்றியில் திலகமிட்டு அனைவருக்கும் சங்கு மாலை அணிவித்து வரவேற்றோம்.

கன்னியாகுமரியில் உள்ள “சீவியூ” நட்சத்திரம் விடுதியில் நடை பெற இருக்கும் கலந்துரையாடலில் தனியார் தங்கும் விடுதி அதிபர்கள், சுற்றுலா பயணி முகவர்கள் பங்கேற்கின்றனர்.

மாலை சூரிய அஸ்தமனம் பகுதியில் நடைபெறும் கலை நிகழ்வுகளை ஆட்சியர் அழகு மீனா பங்கேற்று மனித சங்கிலி நிகழ்வில் பங்கேற்கிறார். கல்லுரி மாணவர்களுக்கு நடைபெற்ற ஓவியம், பேச்சு போட்டி, கோலம் போடும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் அழகு மீனா பரிசு வழங்கி பாராட்டுகிறார் என தெரிவித்தார்.
