• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் சர்வதேச யோகா தினம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பப்படி மற்றும் பிரதமர் அலுவலகத்தின் வழிகாட்டுதல் படியும். மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில், சென்னையில் உள்ள மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் (சிசிஆர்எஸ்) கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு பாறையில் 10_வது சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம் இன்று (ஜூன்_21) கொண்டாடப்பட்டது.
இதன் பொருள்.
“சுய மற்றும் சமூக நலத்திற்கான யோகம்” என்பதாகும்.
தனிநபரின் முழுமையான நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளுக்காக யோகாவை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், ஆயுஷ் அமைச்சகம் இதை ஒரு முக்கியமான நிகழ்வாகக் கருதி சித்தர் யோகத்தின் பயன்களை பொது மக்களுக்கு வலியுறுத்துகிறது.

கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் பாறைப் பகுதியில். கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர பள்ளி மாணவர்களுடன்,குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏ.டி.எஸ்.வி.எஸ். சித்த மருத்துவ கல்லூரி,முஞ்சிறை மரியா சித்த மருத்துவக்கல்லூரி, குலசேகரம் மற்றும் அரசு சித்த மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டை மாணவர்கள் இன்று நடைபெற்ற யோகா பயிற்சியில் உற்சாகமாக பங்கு பெற்றார்கள்.

இன்று கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் பாறை வளாகம் பகுதியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் சி சி ஆர் எஸ் யின் இயக்குநர் பேராசிரியர் டாக்டர் எஸ்.ஜே. முத்துகுமார், முன்னாள் இயக்குநர் வர்மா, பேராசிரியர் டாக்டர் வி. கணபதி ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பிரதமரின் உரை மாணவர்கள் பங்கேற்ற நிகழ்வில் ஒலிபரப்பப்பட்டது‌.