சாமி தோப்பு தலைமை பதியில் அகிலத்திரட்டு உதய தின விழா நேற்று நடந்தது.
அய்யா வைகுண்ட சுவாமி அருளிய புனித நூலான அகிலத்திரட்டு அம்மானை எழுதத் தொடங்கப்பட்ட நாளான கார்த்திகை மாதம் 27 ம்தேதியை அய்யா வழி பக்தர்கள் உதயதின விழாவாக கொண்டாடி வருகின்றனர்.இந்த ஆண்டு அகிலத்திரட்டு உதயதின விழா நேற்று நடந்தது.


விழாவினை முன்னிட்டு, சுவாமிதோப்பு தலைமைப் பதியில் சிறப்புப் பணிவிடைகள், திருஏடு வாசிப்பு, முத்திரி கிணறு வலம் வருதல், போன்றவை நடந்தது.
காலை 10 மணிக்கு தலைமை பதியில் இருந்து அகிலத்திரட்டு அம்மானையை தலைமை பதி குரு வக்கீல் பால.ஜனாதிபதி தலைமையில் அய்யா வழி பக்தர்கள் அகில திரட்டு நூலை கையில் வைத்தப்படி பதி வலம் வந்தனர்.

தொடர்ந்து திரு ஏட்டு காப்பு படித்தும் அதன்பின் அகிலத்திரட்டு எழுதப்பட்ட செய்தியை வாசித்து இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து கர்த்தருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பதி நிர்வாகி குரு பையன்,பால்.லோகாதிபதி, அறக்கட்டளை நிர்வாகிகள் பொதுச் செயலாளர் கிருஷ்ண மணி இணைப்பது செயலாளர் ராஜன், கூடுதல் பொதுச்செயலாளர் ஹாரீஸ், அமைப்புச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மகளிர் அணி செயலாளர் சீதா மனோன்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நாகர்கோவில் வக்கீல் சங்கம் முன்னாள் தலைவர் மரிய ஸ்டீபன், மற்றும் நெல்லை குமரி தூத்துக்குடி தென்காசி கேரளாவைச் சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர் கலந்து கொண்டார்.




