நம்முடைய கொடிக்கு பின்னாடியும் ஒரு இன்ட்ரஸ்டிங்கான ஒரு வரலாற்று குறிப்பு ஒன்று இருக்கு. காத்திருங்கள் என்று தமிழக வெற்றிக்கழக கொடியை அறிமுகப்படுத்தி ஒரு டூவிஸ்ட் வைத்து பேசியிருக்கிறார் விஜய்..,



“நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்களாகிய உங்கள் முன்னாடியும் சரி, தமிழ்நாட்டு மக்கள் முன்னாடியும் சரி, இந்த கொடிய அறிமுகப்படுத்துவதில் எனக்கு ரொம்ப ரொம்ப பெருமையா நினைக்கிNறன். தமிழ் நாட்டின்; வருங்கால வெற்றிக்கான கொடி நம் கொடியை பார்க்கிறேன். தமிழ்நாட்டுக்காகவும் நம்முடைய கொடிக்கு பின்னாடியும் ஒரு இன்ட்ரஸ்டிங்கான ஒரு வரலாற்று குறிப்பு ஒன்று இருக்கு. அதற்கான முழுமையான செயல் திட்டங்கள் முடிந்தவுடன் நான் சொல்லும்போது அன்னைக்கு இந்த கொடிகாண விளக்கத்தையும் நாங்க சொல்றோம். அதுவரைக்கும் ஒரு சந்தோஷமா தமிழ்நாட்டோட வருங்கால தலைமுறைக்கான ஒரு வெற்றிக்கான பாதையை வகுப்போம். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் நன்றி வணக்கம்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் பேசினார்.


