• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கலாச்சரத்தை அவமானப்படுத்துகிறது எண்டம் மாபாடல் – சிவராமகிருஷ்ணன்

Byதன பாலன்

Apr 10, 2023

நமது கலாச்சார உடை அருவருப்பான முறையில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது என்று நடிகர் சல்மான் கானின் ‘எண்டம்மா’ பாடல் குறித்து தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் லஷ்மண் சிவராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழில் அஜித்குமார், தமனா நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான ‘வீரம்’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘கிஸி கி பாய், கிஸி கி ஜான்’ படத்தில் சல்மான் கான் நடிக்கிறார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘எண்டம்மா’ பாடல் சமீபத்தில் வெளியானது. இதில் வேட்டி கட்டிக்கொண்டு சல்மான் கான் ஆடும் நடன அசைவுகள் அருவருக்கத்தக்க வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இதற்கு வலிமை சேர்க்கும் வகையில் எண்டம்மா பாடலில், தென்னிந்திய கலாச்சார உடையான வேட்டி சட்டையை இழிவுபடுத்துவதாக தமிழ்நாட்டை சேர்ந்தமுன்னாள் கிரிக்கெட்வீரர்சிவராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கமான ட்விட்டரில்
“இது நமது தென்னிந்திய கலாச்சாரத்தை மிகவும் கேலி செய்கிறது மற்றும் இழிவுபடுத்துகிறது. மிகவும் அபத்தமான செயல். அது லுங்கி அல்ல, அது வேட்டி . நமது கலாச்சார உடையானது அருவருப்பான முறையில் காட்டப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் ட்விட்டரில் அந்தப் பாடலையும் பகிர்ந்துள்ளார்.