திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரணப் பொருட்களை கேரளா மாநிலத்திற்கு கொண்டு செல்லும் கனரக வாகனங்களை அனுப்பி வைத்தார்கள்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரணப் பொருட்களை கேரளா மாநிலத்திற்கு கொண்டு செல்லும் கனரக வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலையில் அனுப்பி வைத்தார்கள். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, இன்றைய தினம்.கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரணப் பொருட்களை கேரளா மாநிலத்திற்கு கொண்டு செல்லும் கனரக வாகனங்களை அனுப்பி வைக்கப்படவுள்ளது.
அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்திலிருந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேரளா
மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிடும் வகையில் அத்தியாவசிய பொருட்களான 38,000 பிஸ்கட் பாக்கெட்களும், 1300 கிலோ பால் பவுடர், 330 பெட்சீட், 300 துண்டு, 1400 டிசர்ட் , 300 லுங்கிகள். 800 நைட்டிகள், 500 நாப்கிங்கள். 500 பாதுகாப்பு உடைகளும், 2000 முகக்கவசங்களும், 3500 டூத் பிரஸ்களும், 2000 டூத் பேஸ்ட்களும், 2000 சாம்புகளும், 250ஆடைகளும், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் 2 வாகனத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலிருந்து கேரளா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இவ்வாறு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்த செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன்
