• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இந்திய நாட்டின் வீராங்கனைக்குநீதி கிடைக்கவில்லை… அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு..,

தமிழ் புதல்வன்திட்டவிழா, நாகர்கோவிலில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் நடந்தது.விழாவின் நிறைவுக்கு பின் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் . செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ள தமிழ் புதல்வன் திட்டம். நமது தாய் மொழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த திட்டம் செயல் படுத்தப்படுகிறது. மொழி என்பது இனத்தின் அடையாளம். எனவே மொழியின் சிறப்பை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். என் தெரிவித்த அமைச்சர், நாங்கள் எல்லாம் கருணாநிதி பாசறையில் பயின்றவர்கள். யாரும் எதற்கும் பயப்பட மாட்டார்கள்.

திமுக அரசு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அவரை பார்த்து அஞ்சுகிறார்கள் என்று சவுக்கு சங்கர் கருத்து குறித்து கேட்கிறீர்கள். நாங்கள் எல்லாம் முன்னாள் முதல்வர் கலைஞரின் பாசறையில் அரசியல் பயின்றவர்கள் எவரும், யாரையும் கண்டு பயப்படமாட்டார்கள். இந்த பனங்காட்டு நரி எந்த சலசலப்புகளுக்கும் அஞ்சாது, சுதந்திர தினத்தன்று அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றுங்கள் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இந்திய தேசிய கொடியை மதிக்கக் கூடிய பண்பாட்டை,நாகரீகத்தை இந்த நாட்டில் இருக்கும் நாங்கள் அத்தனை பேரும் பெற்றிருக்கிறோம்.

நான் பிரதமர் மோடிக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன்.ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அலுவலகம்,அதன் பிரசாரகர்கள் அனைவரும் இந்த சுதந்திர கொடியை சுதந்திர தினத்தன்று ஏற்றவேண்டும், பிரதமர் ஏற்றவைப்பாரா.? என் கேள்வி எழுப்பினார்.

ஒலிம்பிக் விளையாட்டில் நமது நாட்டின் வீராங்கனை தகுதி நீக்கம் செய்திருப்பது குறித்து சமூக வலைத்தளங்களில் மிக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.134 வீரர்கள்,140 அரசு அதிகாரிகள் சென்றிருக்கிறார்கள். இப்படி பெரும் படை சென்றும் நமது நாட்டின் வீராங்கனைக்கு நீதி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது, இதற்கு மத்திய அரசு முதலில் பதில் சொல்லட்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறினார்.