• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை..!

Byவிஷா

Sep 2, 2023

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு, இரு அணிகளும் முதன்முறையாக ஒருநாள் போட்டியில் மோதுவதால், கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் 16-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இந்த லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும். அதாவது சூப்பர் 4 சுற்றுக்குள் நுழையும் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை போட்டியிட வேண்டும்.
முடிவில் டாப்-2 இடங்களை பெறும் அணிகள் இறுதிச் சுற்றை எட்டும். இந்த சுற்றின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் 238 ரன் வித்தியாசத்தில் நேபாளத்தையும், 2-வது லீக்கில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காள தேசத்தையும் தோற்கடித்தது. இன்று தொடரின் 3-வது லீக்கில் இந்தியாவும், பாகிஸ்தானும் கண்டி மாவட்டத்தில் உள்ள பல்லகெலே விளையாட்டரங்கத்தில் போட்டியில் இறங்குகின்றன. சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் கிரிக்கெட்டில் இரு அணிகளும் முதல் முறையாகச் சந்திப்பதால் எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறியுள்ளது.
இன்று பல்லகெலேயில் மழை பெய்வதற்கு 84 சதவீதம் வாய்ப்புள்ளது,. வானம் கருமேகம் சூழ்ந்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம். ஆடுகளம் இவ்வாறான சீதோஷ்ண நிலையில், ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.