• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இந்தியா-ஆஸ்திரேலியா உச்சி மாநாடு…

Byகாயத்ரி

Mar 21, 2022

இந்தியா-ஆஸ்திரேலியா இருதரப்பு உச்சி மாநாடு இன்று காணொலி மூலம் நடைபெறுகிறது.

பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் விவாதிக்க உள்ளனர்.வர்த்தகம், கனிமங்கள், மற்றும் கல்வி ஆகியவற்றில் நெருக்கமான ஒத்துழைப்புடன் இரு நாடுகளும் செயல்படுவது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.மேலும் இதுவரை இல்லாத அளவாக இந்தியாவின் பல்வேறு துறைகளில் 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை ஆஸ்திரேலியா அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தையின்போது வர்த்தகம் மற்றும் முதலீடு உறவை ஆழப்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். ராணுவம் மற்றும் பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் இரு நாடுகள் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தையின்போது முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.