• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு

ஆடி மாத பிறப்பை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயரத் தொடங்கியுள்ளது. நாளை ஆடி முதல் வெள்ளி என்பதால் பூக்களை வாங்க வியாபாரிகள் சந்தையில் குவிந்துள்ளனர்- மல்லிகைப்பூ கிலோ ரூபாய் 400க்கும்,பிச்சி பூ கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் வரத்து அதிகரித்துள்ளதாலும் உற்பத்தி பெருகி உள்ளதாலும் ஆடி மாதம் எதிர்பார்த்த விலை உயர வில்லை, இன்னும் நாட்கள் செல்லச் செல்ல பூக்களின் விலை உயரும் என பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்- இதில் அரளிப்பூ கிலோ 120 ரூபாய்க்கும், கனகாம்பரம் 125 ரூபாய்க்கும், வாடாமல்லி 40 ரூபாய்க்கும்,சிவப்பு கிரேந்தி 60 ரூபாய்க்கும், சம்பங்கி ரூ 20 க்கும் விற்பனை செய்யப்படுகிறது மேலும் இந்த வண்ண பூக்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.