• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு..!

Byவிஷா

Jan 24, 2024

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த உதவிய ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு அறிவித்தபடி, ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. பணியாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு கோடியே 13 லட்சம் குடும்பங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. ரேஷன் கடை பணியாளர்கள், அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கும் நேரில் சென்று விண்ணப்பங்களை வழங்கி சிறப்பு பணியாற்றினர். இந்த நிலையில், களப்பணியாற்றி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை தொய்வின்றி செயல்படுத்த உதவிய ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா வீதம் என கணக்கிட்டு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், ரேஷன் கடை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக தொகை வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.