கன்னியாகுமரி கடல் நடுவே சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் ,அதனை அடுத்தப் பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை, ஆண்டு(2000)ல், அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.
விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு இடையே உள்ள கடற்பரப்பை இணைக்கும் வகையில் பாலம் கட்டப்படும் என்ற அறிவிப்பு அன்றைய தி மு க ஆட்சியின் போது அறிவிப்பு வெளியானது. பணிகள் தொடங்கும் முன்பே அப்போதைய தமிழக சட்டமன்ற தேர்தலில் தி மு க ஆட்சி கட்டிலில் இருந்து இறங்கிய நிலையில், ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி ஏற்பட்ட முதல் ஐந்து ஆண்டுகள், இந்த இணைப்பு பாலம் பற்றிய அரசின் அறிவிப்பு என ஒன்றும் வெளியாகவே இல்லை.
கடலில் இரண்டு பாறைகளுக்கும் இடையிலும் வெவ்வேறு நீர் ஓட்டம் என்ற நிலையில். திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா படகு இயக்கம் என்பது மாதத்தில் 10_நாட்கள் நடந்தால் அதிசயம் என்ற நிலையில், வருடத்தில் 100 நாட்கள் கூட திருவள்ளுவர் சிலைக்கு படகு இயக்கம் இருக்காது என்ற நிலையில், குமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் தமிழர்கள் திருவள்ளுவர் சிலைக்கு படகில் செல்ல முடியாது. மிகுந்த ஏமாற்றம் அடைந்ததில் உலகெங்கும் இருந்து கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள பொதுமறை தந்த திருவள்ளுவர் சிலையை அருகில் சென்று காணமுடியாத ஏமாற்றத்தை அடைநதனர்.
அ தி மு க.,ஆட்சி 10 ஆண்டுகள் இடைவெளி இல்லாது தொடர்ந்ததால். இணைப்பு பாலம் என்பது ஆலோசிக்கவே படாத திட்டமாக கிடப்பில் கிடந்தது.
திமுக ஆட்சி 2021ல் அமைந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு பாறைகளுக்கு இடையே எத்தகைய பாலம் அமைக்கலாம் என்ற ஆய்வை தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறிய துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வா.வேலு தலைமையில் குறிப்பிட்ட துறையை சேர்ந்த பொறியாளர்கள் மூலம் சம்பந்தப்பட்ட பகுதி ஆய்வு செய்யப்பட்டது. தொங்கு பாலம் பாதுகாப்பற்றது. கூண்டு வடிவில் பிளாஸ்டிக் பாலம் அமைப்பது. பாலம் வழியாக நடந்து செல்லும் மக்கள் இயற்கை அழகை ரசித்து செல்வதுடன் கடலில் காட்சியையும் பார்த்து செல்லும் வகையில் பாலம் அமைப்பது என வரைபடம் தயாரித்து துறை அமைச்சர் ஏ. வா. வேலுவிடம் காண்பிக்கப்பட்ட நிலையில், துறை அமைச்சர் முதல்வர் மு. க. ஸ்டாலினின் பார்வைக்கு கொண்டு சென்று அனுமதி பெற்ற நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் துறை சார்ந்த அமைச்சர், மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜ், துறை சார்ந்த பொறியாளர்கள் பாலம் அமைய இருக்கும் கடல் பரப்பை நேரில் ஆய்வு செய்தனர்.
கடலின் நீர் பரப்பு பகுதியில் அமையும் பிளாஸ்டிக் இணைபாலத்திற்கு முதல் கட்டமாக ரூ.29 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு பணிகள் தொடங்க இடையே ஏற்பட்ட தாமதம் ஒப்பந்ததாரர்கள் பணியை எடுக்க ஏற்பட்ட தாமதத்தால், நிதி ஒதுக்கீடு கூடுதலான ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது ரூ.37_கோடி செலவில் பாலம் பணிகள் நிறைவடைய இருக்கும் நிலையில் (ஜூலை.29)ம் நாள் அமைச்சர் ஏ.வா.வேலு திருவள்ளுவர் சிலை பாறையில் இது வரை நடந்துள்ள பணிகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.
இரண்டு பாறை பகுதிகளை இணைக்கும் வகையில் 27 அடி உயரத்தில் ராட்சத தூண் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
தூண்களுடன் இணைக்கும் பிளாஸ்டிக் இளை இணைப்பு பொருட்கள் புதுச்சேரியில் கூண்டுகள் ஸ்டீன்லெஸ் கம்பிகள் மூலம் வடிவமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த பாலத்தின் பகுதிகள் 222 டன் எடை கொண்டதாகும். கடல் காற்றின் உப்பு தன்மை படியாத,துருப்பிடிக்காத வகையில் ஆன ஸ்டீன்லெஸ் கம்பிகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 101 பாகங்களாக இந்த கூண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இவை துண்டு,துண்டுகளாக கண்டெய்னர் லாரி மூலம் கன்னியாகுமரிக்கு சற்று தொலைவில் உள்ள சின்னமுட்டம் துறை முகத்தில் தற்போது இறக்கி வைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் சிலை பாறை, சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் பகுதியில் கடலை தொட்டுள்ள பகுதியில் இரும்பு தூண்களை நிறுவும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. சர்வதேச சுற்றுலா பகுதியான கன்னியாகுமரி இன்னும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கப்போகிறது. பாலத்தின் நடப்போர் புதிய அனுபவத்தை பெற இருக்கிறார்கள் என்பதை கடல் நீரோட்டம் தன்மை மாறுதலால் படகு போக்குவரத்து தடை என்ற கடந்த கால நிலையை கடந்து. வருடத்தின் அனைத்து நாட்களுமே ஐய்யன் திருவள்ளுவர் சிலை அருகே தமிழர்கள் செல்ல வழி வகுத்துள்ளது.
