• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பெருந்தலைவர் காமராஜர் சிலை திறப்பு

பெரும் தலைவர் காமராஜர் சிலை அமைத்து திறந்து வைத்த குமரி மக்களவை உறுப்பினர்
விஜய் வசந்த்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பள்ளி விளை பகுதியில் காமராஜர் படிப்பகம் அமைந்துள்ளது. இந்த படிப்பகத்தில்  காமராஜர் சிலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை வைத்தனர், கோரிக்கை ஏற்று அவரது தனது சொந்த செலவில் 12 லட்சம் ரூபாய்  கொடுத்து காமராஜர் வெங்கல சிலை அமைக்கப்பட்டது,

அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விஜய்வசந்த் MP கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்து ஆளுயர மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் விஜய் வசந்த் MP செய்தியாளர்களிடம் கூறும் போது குமரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது இந்த சாலையை சீரமைக்க ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அவர்களை சந்தித்து வலியுறுத்தி ரூபாய் 14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு டெண்டர் கோரப்பட்டு பணிகள் தொடங்க நிலையில் உள்ளது.

கூடிய விரைவில் இந்த சாலைகள் சீரமைக்கப்படும் எனவும் தெரிவித்தார் மேலும் குமரி மாவட்டத்தில் பாஜக வளர காங்கிரஸ் கட்சி மீது பல்வேறு குற்றம் சொல்லத்தான் சொல்வார்கள் எனவும் ஆனால் அதற்கு இடம் கொடுக்காதவாறு எங்கள் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம் என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், மண்டல தலைவர்கள்  செல்வன், சிவபிரபு, கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவகுமார், மாமன்ற உறுப்பினர் அனுஷா பிரைட். மற்றும் பள்ளிவிளை சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.