மதுரை மாவட்டம் சோழவந்தானில் வட்ட பிள்ளையார் கோவில் அருகே எம் வி எம் பெட்ரோல் பங்க் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் உயர் ரக பெட்ரோல் டீசல் விற்பனை மையம் திறப்பு விழா நடைபெற்றது. எம் வி எம் கலைவாணி பள்ளி தாளாளர் பேரூராட்சி கவுன்சிலர்,நகர அரிமா சங்கத் தலைவர் எம் மருது பாண்டியன் விற்பனையை துவக்கி வைத்தார்.எம் வி எம் குழும சேர்மன் மணி முத்தையா, நிர்வாகி வள்ளி மயில் குத்து விளக்கு ஏற்றினார்கள். இதில் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், பேரூர் செயலாளர் சத்யபிரகாஷ், வார்டு உறுப்பினர்கள், அரிமா சங்க நிர்வாகிகள், அடகு கடை சங்க நிர்வாகிகள், அரசு பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், நண்பர்கள் உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.