சென்னை பல்கலைகழகத்தின் எதிரே அன்றைய முதல்வர் காமராசர் சிலையை திறப்பதற்கு அன்றைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவை அணுகிய போது, அவர் வெளிப்படுத்திய கருத்து, வாழந்துக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கு சிலை வைப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது.. ஆனால் தமிழக முதல்வர் காமராசர் நிலையில் என் எண்ணத்தை புறம் தள்ளி விட்டு காமராஜர் சிலையை திறக்க வருகிறேன் என சம்மதம் தெரிவித்தாராம்.
சென்னையில் காமராஜர் சிலை திறப்பு விழாவின் போது மழை பெய்து கொண்டிருந்ததாகவும், மக்கள் கூட்டம் கலையாது இருந்தது குறித்து, நூற்றாண்டை காண இருக்கும் “ஆனந்த விகடன்” வெளியிட்ட தலைப்பு அடாது மழை பெய்தாலும் விடாது கேட்போம் நேருவின் பொன்மொழிகளை.
நாகர்கோவிலில் மக்களவை தொகுதியில் 1969_இடைத்தேர்தலிலும்,1971_ பொதுத் தேர்தலிலும் காமராஜர் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வரலாறு திரும்பும் என்பதை உண்மையாக்குவது போல், வசந்தகுமாரின் மரணத்தால் ஏற்பட்ட இடைத்தேர்தலில் அவரது மகன் விஜய்வசந்த் போட்டி இட்டு வெற்றி பெற்றார் , தொடர்ந்து வந்த பொதுத்தேர்தலில் மீண்டும் விஜய் வசந்த் போட்டியிட்டு வெற்றியை தனதாக்கிக் கொண்ட நிலையில், பெரும் தலைவர் காமராஜரின் 122_வது பிறந்த நாள் விழா நாகர்கோவில் நாகராஜா திடலில், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆர். ராஜேஷ்குமார் தலைமையில் நடை பெற்ற விழாவின் பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பே சாரலாக தொடங்கி பெருமழை, தூறல் என விட்டு, விட்டு மழை பெய்தாலும் “அப்பாச்சி யின்”பிறந்த நாள் விழா திடலை விட்டு அகல மாட்டோம் என மக்கள் அமர்ந்து இருந்தது. இந்த காட்சி காமராஜர் சிலையை நேரு திறந்து வைத்த போது கலையாது இருந்த அந்த நிகழ்வின் நினைவை முதிர் வயதினர் பலருக்கு நினைவில் வந்ததை பத்திரிகையாளர்களிடம் நினைவு கூர்ந்தார்கள்.
மேடையிலும் குடை பிடித்துக்கொண்டு இருந்தது போல் பார்வையாளர்களும் குடை பிடித்துக்கொண்டு இருந்தது எப்போதுவது நடக்கும் நிகழ்வு கடந்த (ஜூலை_15 )ம் நாள் நடந்தது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அழகிரி பேச ஒருவர் குடைபிடித்து நின்றார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை பேச்சிற்கு வழி விடுவது போல் மழை சற்றே ஓய்வெடுக்க, நம் தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழாவை இயற்கையே மழையாக வந்து வாழ்த்துகிறது என செல்வப் பெருந்தகை அவரது பேச்சை தொடங்கினார். அவர் பேச்சில். நம் தலைவர் காமராஜர் பிறந்த நாளை இன்று அனைத்து கட்சிகளும் கொண்டாடுகின்றன. இதில் விந்தையான ஆச்சரியம். டெல்லியில் தலைவர் தங்கியிருந்த போது அவரை கொலை செய்ய முயன்ற கூட்டம் தீக்கிரையாக்கி கொலை செய்ய முயன்ற அந்த கூட்டத்தின் வழி வந்தவர்களும் இன்று கொண்டாடுகிறார்கள். நாம் மட்டுமே தான் பெரும் தலைவர் காமராஜரை கொண்டாட முடியும் என தெரிவித்தவர் அடுத்து தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை வைத்தார்.
காமராஜர் முதல்வராக இருந்த போது குமரி மாவட்டத்தில் அப்பர் கோதையார், லோவர் கோதையார் என இரண்டு மலைகளுக்கு இடையே பாலம் அமைத்து நீர் போக்குவரத்தை உருவாக்கி மின்சார உற்பத்தி மட்டும் அல்ல நீர் போக்குவரத்துக்கு உருவாக்கிய திட்டம்,இன்றும் மாத்தூர் தொட்டிபாலம் என அடையாளம் காட்டப்படும் பாலத்திற்கு காமராஜர் பெயரை சூட்டுவதுடன், அங்கே பெரும் தலைவருக்கு ஆள் உயரம் சிலை அமைக்க வேண்டும் என முதல்வருக்கு திறந்த கோரிக்கை வைத்தவர் தொடர்ந்து வெளிப்படுத்தியது. நாளை(ஜூலை_16) விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்கும் நிகழ்வில் நானும், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமாரும் முதல்வர் ஸ்டாலின் இடம் கோரிக்கை மனு கொடுக்க இருக்கிறோம் என பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.
தலைவர் காமராஜர் பிறந்த நாளில் நாம் எல்லோரும் ஒரு சபதம் ஏற்க வேண்டும். இந்தியாவில் ஜனநாயக சக்திகள் வளர வேண்டும். ஜனநாயக சக்திகள் என்றால் அது இந்தியா கூட்டணியுடைய சக்திகள், பாசிச சக்திகள் என்றால் அது பாரதிய ஜனதா கட்சி என்பதை நாம் மறக்கக்கூடாது. இத்தகைய சக்திகளுக்கு எதிரான குரல்கள் இந்தியாவின் பல்வேறு திசைகளில் ஒலிக்க தொடங்கி விட்டது. அது தான் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 13 இடைத்தேர்தல்களில்,11_இடங்களில் இந்திய கூட்டணி பெற்றிருக்கும் வெற்றி காட்டும் புதிய சரித்திரத்தின் புதிய திருப்பு முனையாக, மோடிக்கு சொல்லுகிற எச்சரிக்கை என கூறினார்.
நிகழ்ச்சியில். நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜய் வசந்த், ராபர்ட் பூரூஸ், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, கே.எஸ். அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், தாரகை கத்பட்,ரூபி மனோகரன். குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர். பினுலால்சிங், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம் ஆகியோர் பங்கேற்றனர்.
